Winter Olympics Sky jumping to top spot Norway
23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் அணிகளுக்கான ஸ்கை ஜம்பிங் பிரிவில் முதலிடம் பிடித்தது நார்வே.
23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று பாப்ஸ்லெய், ஸ்கை ஜம்பிங், ஸ்பீடு ஸ்கேட்டிங் ஆகிய 3 பிரிவுகளில் பதக்கப் போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் ஆடவர் அணிக்கான ஸ்கை ஜம்பிங் போட்டியில் நார்வே முதலிடம் பிடித்தது.
ஜோஹான் ஆன்ட்ரே ஃபார்ஃபாங், ராபர்ட் ஜோஹன்சன், ஆன்ட்ரியாஸ் ஜெர்னென், டேனியல் ஆன்ட்ரே டான்டே ஆகியோர் அடங்கிய இந்த அணி 1098.5 புள்ளிகளுடன் தங்கம் வென்றது.
ஜெர்மனியின் ரிச்சர்ட் ஃப்ரெய்டாக், கார்ல் கீகர், ஸ்டீபன் லேஹி, ஆன்ட்ரியாஸ் வெல்லிங்கர் ஆகியோர் அடங்கிய அணி 2-ஆம் இடம் பிடித்தது.
போலந்தின் ஸ்டீஃபன் ஹுலா, மாசியேஜ் கோட், டேவிட் குபாக்கி, கமில் ஸ்டாச் அடங்கிய அணி 3-ஆம் இடம் பிடித்தது.
ஆடவருக்கான 500 மீ. ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் நார்வேயின் ஹாவர்டு லோரென்ட்ùஸன் 34.41 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தார்.
தென் கொரியாவின் சா மின் கியு 34.42 விநாடிகளில் வந்து இரண்டாம் இடம் பிடித்து வெள்ளியும், சீனாவின் காவ் டிங்யு 34.65 விநாடிகளில் வந்து மூன்றாம் இடம் பிடித்து வெண்கலமும் வென்றனர்.
இரு ஆடவர்களுக்கான பாப்லெய் விளையாட்டில் கனடா, ஜெர்மனி, லாத்வியா முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தன.
பதக்கப் போட்டிகள் தொடங்கிய 10-ஆம் நாளான நேற்று நார்வே 28 பதக்கங்களுடன் முதலிடத்திலும், ஜெர்மனி 20 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், கனடா 17 பதக்கங்களுடன் 3-ஆம் இடத்திலும் உள்ளன.
