Wimbledon Tennis Nadal loss Muller advanced for the first time in the quarter
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலை தோற்கடித்ததன் மூலம் விம்பிள்டன் போட்டியில் முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறினார் கில்லேஸ் முல்லர்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் 4-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடாலை எதிர்கொண்டார் தரவரிசையில் 16-வது இடத்தில் இருக்கும் லக்ஸம்பெர்க்கின் கில்லெஸ் முல்லர்.
விறு விறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் 6-3, 6-4, 3-6, 4-6, 15-13 என்ற செட் கணக்கில் கில்லெஸ் முல்லர், நடாலைத் தோற்கடித்து வெற்றிப் பெற்றார்.
இதன்மூலம் கில்லெஸ் முல்லர் முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.
அவர் காலிறுதியில் குரோஷியாவின் மரின் சிலிச்சை சந்திக்கவுள்ளார்.
காலிறுதிக்கு முந்தைய மற்றொரு சுற்றில் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச் மற்றும் உலகின் 8- ஆம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீமுடன் மோதி 6-3, 6-7(7), 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் டொமினிக் தீமை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையர் 4-வது சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-2, 7-6(5), 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் அட்ரியான் மனாரினோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
அவர் தனது காலிறுதியில், செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை சந்திக்கிறார்.
மகளிர் பிரிவு காலிறுதி ஒன்றில் ரஷியாவின் ஸ்வெட்லனா குஸ்நெட்ஸாவாவை எதிர்கொண்ட முகுருஸா, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
அதேபோல், மற்றொரு காலிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் லாத்வியாவின் ஜெலீனா ஆஸ்டாபெங்கோவை தோற்கடித்தார்.
