Will Vishwanathan Anand be the winner of chess competition now?

அல்டிபாக்ஸ் நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் முதல் வெற்றியை எதிர்நோக்கி உள்ளார்.

அல்டிபாக்ஸ் நார்வே செஸ் போட்டியில் 

ஐந்து முறை உலக சாம்பியனான ஆனந்த் இதுவரை ஆடிய ஆறு சுற்று ஆட்டங்களும் சமனிலேயே முடிந்தன. இதன்மூலம் அவர் பின்தங்கியுள்ளார். 

அவருக்கு இன்னும் மூன்று சுற்று ஆட்டங்களே மீதமுள்ள நிலையில் 7-வது சுற்று ஆட்டத்தில் பிரான்ஸின் மேக்ஸிம் வாச்சியரை எதிர்கொள்கிறார்.

அதற்கடுத்த சுற்றுகளில் அமெரிக்காவின் பேபியனோ கரனாவையும், உக்ரைனின் செர்ஜி கர்ஜாக்கினையும் எதிர்கொள்கிறார். 

நார்வே செஸ் போட்டியில் இதுவரை ஒரு வெற்றி கூட பெறாத ஆனந்த், 7-வது சுற்று ஆட்டத்தில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் உள்ளார். 

உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனுடன் அவர் மோதிய ஆட்டமும் சமனில் முடிந்தது.