டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியின் விளையாடாத கேப்டனாக முன்னாள் வீரரான மகேஷ் பூபதி அறிவிக்கப்படலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போதைய கேப்டனான ஆனந்த் அமிர்தராஜ், மீண்டும் ஒருமுறை கேப்டனாக இருக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவருக்கு வீரர்களின் ஆதரவு அதிகமிருந்தாலும், அகில இந்திய டென்னிஸ் சங்கம் அவர் மீது அதிருப்தியில் உள்ளது.

எனவே தில்லியில் வியாழக்கிழமை நடைபெறும் அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தின்போது புதிய கேப்டனாக மகேஷ் பூபதி தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது.