ஐபில் கிரிக்கெட் தொடரின் 42-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லியும், குஜராத் அணியும் இன்று டெல்லியில் மோதுகின்றன.

ஐபில் கிரிக்கெட் தொடரின் 42-ஆவது லீக் ஆட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில், டெல்லியும், குஜராத்தும் மோதுகின்றன.

இதுவரை ஒன்பது ஆட்டங்களில் விளையாடி மூன்று வெற்றிகளுடன் ஆறு புள்ளிகளைப் பெற்றுள்ளது டெல்லி அணி. இந்த ஆட்டத்தில் வெற்றிப் பெற்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்க முடியும்.

டெல்லி அணி, தொடர்ச்சியாக ஐந்து தோல்விகளை சந்தித்துள்ளது. கடந்த ஆட்டத்தில் ஐதராபாதை வீழ்த்தியதன் மூலம் நம்பிக்கைப் பெற்றுள்ளது.

ஆனால், குஜராத் அணி ஏற்கெனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இவ்விரு அணிகளும் இரு ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன.

இன்று இரவு 8 மணிக்கு சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பாகும்.