why sachin did not watch ipl final match wankhede stadium
மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் அனைத்து ஐபிஎல் போட்டிகளையும் காணும் சச்சின் டெண்டுல்கர், ஐபிஎல் இறுதி போட்டியை காண செல்லவில்லை. அதற்கான காரணத்தை அவரே தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 11வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இரண்டு ஆண்டுகால தடைக்கு பிறகு தோனி தலைமையில் களமிறங்கிய சென்னை அணி, இறுதி போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இந்த இறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் மும்பையை சேர்ந்தவர் என்பதால், மும்பையில் நடக்கும் அனைத்து போட்டிகளையும் சச்சின் காண்பது வழக்கம். ஆனால் ஐபிஎல் இறுதி போட்டி மும்பையும் நடந்தும் கூட அவர் அதை நேரில் காண வரவில்லை.
சச்சின் ஏன் வரவில்லை என்ற கேள்வி பரவலாக எழுந்தது. இந்நிலையில், டுவிட்டரில் அதற்கான காரணத்தை தெரிவித்தார் சச்சின். பிரபலமான பாடகியான லதா மங்கேஷ்கரின் வீட்டில் அவருடன் போட்டியை பார்த்ததாக சச்சின் தெரிவித்துள்ளார். லதா மங்கேஷ்கருடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, அவருடன் போட்டியை கண்டது கூடுதல் சிறப்பானது என பதிவிட்டுள்ளார்.
