why dhoni using curved shape bat

கிரிக்கெட் வீரர்கள், தாங்கள் பயன்படுத்தும் பேட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர். தங்களுக்கு தேவையான வகையில், அதை வடிவமைத்து வைத்துக்கொள்வர். அதை மிகவும் கவனத்துடன் பராமரித்து பாதுகாப்பர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ரசிகர்களும் தங்களது ஆஸ்தான வீரர்கள் பயன்படுத்தும் பேட்களை பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாகவே இருப்பர். அந்தவகையில், முக்கியமான வீரர்களின் பேட்களை வடிவமைத்தும், பழுது நீக்கியும் கொடுக்கும் பிரபலமான பேட் வடிவமைப்பாளர் மகேஷ் ரன்ஷூபே.

இவர் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக தோனி, கோலி, கேதர் ஜாதவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் பேட்களை பழுது நீக்கி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் மகேஷ் ரன்ஷூபே. தோனியின் பேட் குறித்த சுவாரஸ்ய தகவல்தான் அது. தோனி பயன்படுத்தும் பேட்டின் அடிப்பகுதி மட்டும் நேராக இல்லாமல் வளைந்து இருக்கும். 

அதற்கான காரணத்தை மகேஷ் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக பேசிய மகேஷ், தோனி பயன்படுத்தும் பேட்டின் அடிப்பகுதி வளைந்து இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். யார்க்கர் பந்துகள் வேகமாக வீசப்படும்போது அதை ஆடும்போது பேட் பாதுகாப்பாக இருப்பதற்காக அடிப்பகுதி வளைந்து இருக்க வேண்டும் என தோனி வலியுறுத்துகிறார் என மகேஷ் தெரிவித்துள்ளார்.