Asianet News TamilAsianet News Tamil

கோப்பையை தோற்றது இருக்கட்டும்.. ஃபைனலை நடத்தும் உரிமையை இழந்தது ஏன்..?

கிரிக்கெட் விளையாட்டிற்கு முழுக்க முழுக்க ரசிகர்கள் பட்டாளம் ஓவரோ ஓவர். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 2019 மேட்சில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே...

why csk missed chance to win in ipl 2019
Author
Chennai, First Published May 17, 2019, 1:22 PM IST

சிஎஸ்கே தோல்விக்கு பின்னனியில் பகீர் தகவல்...! இதுதான்  காரணமா..? 

கிரிக்கெட் விளையாட்டிற்கு முழுக்க முழுக்க ரசிகர்கள் பட்டாளம் ஓவரோ ஓவர். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 2019 மேட்சில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே... இருந்தபோதிலும் எந்த அணியாக இருந்தாலும் அதற்கு ஈடு இணையாக மிகவும் டஃப் கொடுப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சென்ற முறை போலவே, இந்த முறையும் சிஎஸ்கே வெற்றி பெறுமா ?என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியில் இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது என்பதை முன்கூட்டியே அறியும் படியாக ஒரு சில விஷயங்கள் அமைந்தது.

why csk missed chance to win in ipl 2019

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, நடப்பு சாம்பியன் என்ற முறையில் அந்த அணி தொடர்பான இடத்தில் இறுதிப் போட்டியை நடத்துவது என்பது வழக்கமான ஒன்று. அப்படிப்பார்த்தால் இந்த முறை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் போட்டி நடந்து இருக்க வேண்டும். ஆனால் எப்படி மிஸ் ஆனது? ஆம்.. இதன் பின் ஒளிந்திருக்கும் ஒரு சின்ன சீக்ரெட் இதோ...

why csk missed chance to win in ipl 2019

ஒருவேளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடந்திருந்தால், தமிழ்நாட்டிற்கு வணிக ரீதியில் லாபம் கிடைத்திருக்கும். ஆனால் எதற்காக ஐதராபாத்தில் நடத்த வேண்டிய சூழல் உருவானது தெரியுமா? சென்னை சேப்பாக்கம் மைதானம் குத்தகை தொடர்பாக தமிழக தமிழக அரசிடம் உரிய அனுமதி இல்லாமல் மூன்று அரங்குகள் கட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சென்னை மாநகராட்சியோடு சில முரண்பாடு கொண்டுள்ளது.

why csk missed chance to win in ipl 2019

இந்த விஷயத்தைப் பொருத்தவரையில்... தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தன்னிச்சையான முடிவு ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்றாலும், பொது நலன் கருதி தமிழக அரசு இதற்கு ஒரு சுமுகமான தீர்வை ஏற்படுத்தி இருக்கலாம் என்பதே சிஎஸ்கே அணி ரசிகர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.

அதாவது சென்னையில் இறுதி போட்டி நடந்திருக்கும் பட்சத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா முழுவதிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் சென்னைக்கு வந்து இருப்பார்கள். அதன் மூலம் சுற்றுலா துறை தொழிலுக்கு கோடிக்கணக்கான வருவாய் கிடைத்து இருக்க அதிக வாய்ப்பு உண்டு. உதாரணத்திற்கு மிக மிக பின்தங்கிய மாநிலமாக கருதப்படும் ஒடிசாவில் ஹாக்கி போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து அங்கு போட்டி நடத்தப்பட்டதில் சுற்றுலாத்துறை வருவதை ஈட்டியதை பார்க்க முடிந்தது.

அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டி நடந்திருந்தால் ரசிகர்கள் மட்டுமல்ல.. தமிழகத்திற்கும் வருவாய் ரீதியில் நல்ல லாபம் கிடைத்திருக்கும் என்பதை யாராலும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.

Follow Us:
Download App:
  • android
  • ios