Who will win Kolkattava? Aitarapatta? Know today ...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவும், ஐதராபாத் அணியும் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன.
கொல்கத்தா அணியைப் பொறுத்த வரையில் முந்தைய லீக் சுற்றில் மொத்தம் ஆடிய 14 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்றுள்ளது.
காயம் காரணமாக விலகியுள்ளவரும், கொல்கத்தா அணியின் நம்பிக்கை வீரருமான கிறிஸ் லின் இந்த ஆட்டத்தில் களம் காணலாம். அதேபோல், சுனீல் நரைன் நல்ல தொடக்கத்தை தரலாம்.
இவர்கள் தவிர மணீஷ் பாண்டே, ராபின் உத்தப்பா ஆகியோர் அணியின் ஸ்கோரை உயர்த்த உதவியாக இருப்பார்கள். இவர்களுடன் கேப்டன் கம்பீரும் உறுதுணையாக இருக்கிறார்.
பந்துவீச்சைப் பொறுத்த வரையில், கிறிஸ் வோக்ஸ், உமேஷ் யாதவ் ஆகியோர் ஐதராபாத் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பர்.
ஐதராபாத் அணியைப் பொறுத்த வரையில், லீக் சுற்றின் 14 ஆட்டங்களில் 8 வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் வார்னர் வழக்கம் போல் ரன் மழை பொழிய வாய்ப்புண்டு. வார்னர் விக்கெட்டை விரைவாக வீழ்த்தாத பட்சத்தில் கொல்கத்தா போராட வேண்டியிருக்கும்.
வார்னருக்கு அடுத்தபடியாக ஷிகர் தவன் இந்த சீசனில் 468 ரன்கள் குவிப்பில் ஈடுபடுவார். எனவே, அவரும் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார் என எதிர்பார்க்கலாம். இவர்கள் தவிர யுவராஜ் சிங்கும் உறுதுணையாக உள்ளார்.
பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் சிறப்பாகச் செயல்படுவார் எனத் தெரிகிறது. அவருடன் முகமது சிராஜ், ரஷீத் கான், சித்தார்த் கெளல் ஆகியோரும் உள்ளனர்.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் தோற்கும் அணியுடன் களம் காணும். அதில் வெல்லும் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறும்.
