Who will participate in the National Womens Chess tournament?

ஜூலை மாதம் கர்நாடகத்தில் நடைபெறவுள்ள தேசிய மகளிர் செஸ் போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க போவது யார்? என்ற வினாக்கு பதிலளிக்க போகிறது திருவாரூரில் தொடங்கியுள்ள மாநில அளவிலான மகளிர் செஸ் போட்டி.

திருவாரூரில் மாநில அளவிலான மகளிர் செஸ் போட்டி தொடங்கியுள்ளது. இந்தப் போட்டி ஏப்ரல் 27-ஆம் தேதி வரை நடைபெறும்.

திருவாரூர் மாவட்ட செஸ் சங்கம், சிஏ ஹோண்டா நிறுவனம் சார்பில் நடைபெறும் 45-ஆவது மாநில மகளிர் செஸ் போட்டியில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த 94 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதனை மருத்துவர் செந்தில் தொடங்கி வைத்தார்.

இதில், முதலிடம் பெறும் நான்கு பேர் ஜூலை மாதம் கர்நாடகத்தில் நடைபெறவுள்ள தேசிய மகளிர் செஸ் போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க தகுதி பெறுவர்.