Who is participating in India on behalf of Super Series Patmundan? Heres the list ...

இன்றுத் தொடங்கும் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால், ஹெச்.எஸ்.பிரணாய், சாய் பிரணீத், காஷ்யப், சௌரவ் வர்மா, மானு அத்ரி - சுமீத் ரெட்டி இணை மற்றும் அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி இணைஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி ஹாங்காங்கில் இன்றுத் தொடங்குகிறது. இதில் இந்தியாவின் பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் தகுதிச்சுற்று வீராங்கனையை சந்திக்கிறார்.

அவர் முதல் இரண்டு சுற்றுகளில் வெல்லும் பட்சத்தில் காலிறுதியில் ஜப்பானின் அகானே யமாகுசியை எதிர்கொள்வார்.

அதேபோல் சாய்னா நெவால் தனது முதல் சுற்றில் டென்மார்க்கின் மெட்டே பெüல்சென்னுடன் மோதுகிறார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் களம் காணும் பிரணாய், ஹாங்காங்கின் ஹு யுன் உடனான மோதுகிறார்.

சாய் பிரணீத், தென் கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்கொள்கிறார்.

காஷ்யப் சீன தைபேவின் கான் சாவ் யுவையும் தொடக்கச் சுற்றில் சந்திக்கின்றனர்.

சௌரவ் வர்மா, இந்தோனேஷியாவின் டாமி சுகியார்டோவை முதல் சுற்றில் சந்திக்கிறார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் தேசிய சாம்பியனான மானு அத்ரி - சுமீத் ரெட்டி இணை தங்களது முதல் சுற்றில், தகுதிச்சுற்று வீரர்களை எதிர்கொள்கிறது.

மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி இணை, சீனாவின் ஹுவாங் டோங்பிங் - லி வென்மெய் இணையை சந்திக்கிறது.