When are the players auctioned for the eleventh IPL? BCCI announces ...

2018-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் பதினோறாவது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் தொடர்பான தேதியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

புதுடெல்லியில் டிசம்பர் 6-ஆம் தேதி ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டு இம்முடிவு அறிவிக்கப்பட்டு உள்ளது. பின்னர் பிசிசிஐ நடத்திய பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பின்னர் இந்த ஏலம் தொடர்பான விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது.

அதன்படி, ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ஐந்து வீரர்கள் வரை தக்கவைத்துக்கொள்ள முடியும். இவ்வாறு தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விவரத்தை அனைத்து அணிகளும் ஜனவரி 4-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.

ஒவ்வொரு அணிக்கும் வீரர்களை ஏலம் எடுக்க இந்த முறை ரூ.80 கோடி வரை செலவு செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதில் குறைந்தபட்சம் 75 சதவீதமாவது கட்டாயம் செலவு செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்துக்கு அதிகபட்ச தொகை ரூ.66 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 11-வது சீசன் ஐபிஎல் போட்டிகளுக்குகான வீரர்கள் ஏலம் ஜனவரி 27, 28 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறவுள்ளது.