சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் சாய்னா நெவால், ஸ்ரீகாந்த், அஜய் ஜெயராம், சாய் பிரணித், பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி இணை ஆகியோர் தங்களது பிரிவில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் 16-வது இடத்தில் இருந்த சாய்னா, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றதால் 4 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை அடைந்துள்ளார்.

அதே போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, தரவரிசையில் ஏற்கெனவே இருந்த 4-வது இடத்திலேயே தொடர்கிறார்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி வரை முன்னேறிய ஸ்ரீகாந்த், இரு இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பெற்றுள்ளார்.

இந்தியாவின் அஜய் ஜெயராம் ஒரு இடம் முன்னேறி 16-வது இடத்தையும், சாய் பிரணீத் 2 இடங்கள் முன்னேறி 17-வது இடத்தையும் அடைந்துள்ளனர்.

யுஎஸ் ஓபன் பாட்மிண்டன் பட்டம் வென்ற ஹெச்.எஸ்.பிரணாய் மூன்று இடங்கள் சறுக்கி, 18-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி இணை ஒரு இடம் முன்னேறி 19-வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

மகளிர் இரட்டையர் பிரிவில், அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி இணை 24-வது இடத்தில் தொடர்கிறது.

ஆடவர் இரட்டையர் முதல் 25 இடங்களுக்குள் இந்திய ஜோடி எதுவும் இல்லை.