மேற்கு வங்கத்திற்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மூன்று ஓட்டங்களில் பாகிஸ்தான் வெற்றிப் பெற்று கர்சித்தது.

பாகிஸ்தான் – மேற்கு வங்கம் இடையிலான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைப்பெற்றது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 132 ஓட்டங்களில் மொத்தமாக சுருண்டது.

அந்த அணியில் அதிகபட்சமாக சோயிப் மாலிக் 28 ஓட்டங்களும், பாபர் அசாம் 27 ஒட்டங்களும் எடுத்தனர்.

மேற்கு வங்கம் தரப்பில் சுனில் நரின், பிராத்வெய்ட் தலா மூன்று விக்கெட்டுகளையும், சாமுவேல் பத்ரீ இராண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய மேற்கு வங்க அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது சாதகமாயின. சாட்விக் வால்டன் 21 ஓட்டங்களிலும், சாமுவேல்ஸ் 44 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

கடைசி ஓவரில் மேற்கு வங்கத்தின் வெற்றிக்கு 14 ஓட்டங்கள் தேவைப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் அசன் அலி பந்து வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட சுனில் நரின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி பட்டையை கிளப்பினார். மூன்றாவது பந்தில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை. நான்காவது பந்தில் வைடு வகையில் ஒரு ரன் வந்தது.

மீண்டும் வீசப்பட்ட நான்காவது பந்தில் ரன் இல்லை. ஆனால், ஐந்தாவது பந்தில் சுனில் நரின் பரிதாபமாக ‘ரன்–அவுட்’ ஆனார். கடைசி பந்தில் ஐந்து ஓட்டங்கள் தேவை என்று இருந்தபோது, அதை சந்தித்த ஜாசன் ஹோல்டர் ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.

20 ஓவர்களில் மேர்கு வங்கம் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி மூன்று ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று கர்சித்தது.

பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ‌ஷதாப் கான் நான்கு விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி 2–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.