We will give a good start in this seasons first match - Chennai FC coach John Gregory confirmed ...

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி தொடங்கும் முதல் ஆட்டத்தில் ஒரு நல்ல தொடக்கத்தை கொடுப்போம் என்று சென்னையின் எஃப்சி அணியின் பயிற்சியாளர் ஜான் கிரேகரி உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று சீசன்களாக சென்னை அணியின் பயிற்சியாளராக மெட்டாரஸி இருந்த நிலையில், தற்போது இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் கிரேகரி அந்த அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், இந்த சீசன் குறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

"மெட்டாரஸி சென்னை அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். அவரது பாணியிலேயே இந்த அணியை வழிநடத்த விரும்புகிறேன். விளையாட்டில் எப்போதுமே வெற்றியை நோக்கிய ஒரு அழுத்தம் இருக்கும்.

தாய்லாந்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் மூன்று போட்டிகளில் விளையாடினோம். சென்னை அணியினர் அதில் சிறப்பாக செயல்பட்டனர். களத்தில் வீரர்களின் மனோபாவமும், விளையாட்டு நேர்த்தியும் என்னை ஈர்த்தன. எங்களது கடின உழைப்பின் மூலம் இந்த சீசன் தொடங்கும் முதல் ஆட்டத்தில் ஒரு நல்ல தொடக்கத்தை கொடுப்போம்.

அணியில் குறிப்பிடத்தக்க நட்சத்திர வீரர்கள் இல்லையென்றாலும், கூட்டு முயற்சி சிறப்பாக உள்ளது. சிறந்த கால்பந்து நட்சத்திரங்களை உருவாக்கி வரும் சென்னை அணி இந்த சீசனிலும் அத்தகைய வீரர்களை உருவாக்கும்" என்று அவர் கூறினார்.