We are going to finish second in the international squash match
வெஸ்ட் ரேன்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி தெறிக்கவிட்டு உள்ளார்.
வெஸ்ட் ரேன்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டி தொழில்முறை வீரர்கள் ஸ்குவாஷ் சங்கத்தின் (பிஎஸ்ஏ) சார்பில் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் வேலவன் - தென் ஆப்பிரிக்காவின் டிரிஸ்டான் ஐசெல் மோதினார்.
இதில், 16-14, 15-13, 11-7 என்ற நேர் செட்களில் டிரிஸ்டான் ஐசெலைத் தோற்கடித்தார் வேலவன்.
கடந்த 10 நாள்களில் இரண்டாவது முறையாக சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளார் வேலவன்.
அடுத்ததாக வேலவன் எகிப்தின் முகமது எல்ஷெர்பினியை சந்திக்கிறார்.
