wavringa lost Netherland player ...

டென்னிஸில் சர்வதேச போட்டியின் ஆடவர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா நெதர்லாந்தின் டல்லான் கிரீக்பூரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

டென்னிஸில் சர்வதேச போட்டியின் ஆடவர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா 6-4, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் டல்லான் கிரீக்பூரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் நடைபெற்றுவரும் டென்னிஸில் சர்வதேச ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 13-வது இடத்தில் இருக்கும் வாவ்ரிங்கா, தரவரிசையில் 259-வது இடத்தில் உள்ள டல்லானை நேற்று எதிர்கொண்டார்.

முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் அவர் கைப்பற்றினார். எனினும், அடுத்த செட்டை 3-6 என்ற கணக்கில் அவரிடம் பறிகொடுத்தார். ஆட்டத்தின் முடிவைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் 6-2 என்ற கணக்கில் எளிமையாகக் கைப்பற்றி வெற்றி பெற்றார் டல்லான்.

வாவ்ரிங்கா, "பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. எனது டென்னிஸ் பயணத்தில் மேடு, பள்ளங்களைக் கடந்தே வந்திருக்கிறேன். டல்லான் இந்த வெற்றிக்குத் தகுதியானவர்" என்று அவர் தெரிவித்தார்.