ஐபிஎல் இறுதி போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை வாட்சன் பெற்றுள்ளார். சஹாவிற்கு பிறகு இறுதி போட்டியில் சதமடித்த இரண்டாவது வீரர் வாட்சன் தான்.

ஐபிஎல் 11வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை சென்னை அணி வென்றுள்ளது. வாட்சனின் அதிரடி சதத்தால், ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. இறுதி போட்டியில் சதமடித்து, சென்னை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ஷேன் வாட்சன் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம், ஐபிஎல் இறுதி போட்டியில் சதமடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை வாட்சன் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 2014 இறுதி போட்டியில் சஹா 115 ரன்கள் குவித்தார். ஆனால் இறுதி போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் வாட்சன் தான்.

நேற்றைய போட்டியில் 14வது ஓவரின் கடைசி பந்தில், சிக்ஸர் அடித்த வாட்சன், இறுதி போட்டியில் இரண்டாவது பேட்டிங்கில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துவிட்டார். அதன்பிறகு சதமடித்த வாட்சன், 117 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஐபிஎல் இறுதி போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியல்:

1. ஷேன் வாட்சன்(117*) vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

2. ரித்திமான் சஹா(115) vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

3. முரளி விஜய்(95) vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

4. மனீஷ் பாண்டே(94) vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்