washigton sunder in indian cricket team

பேட்டிங், பௌலிங் ரெண்டிலேயும் அசத்துவேன்!! இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சாதனைத் தமிழன் வாஷிங்டன் சுந்தர் நெகிழ்ச்சி !!

18 வயதில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள தமிழரான வாஷிங்டன் சுந்தர், மொகாலியில் இன்று நடைபெறும் இலங்கைக்கு எதிரான போட்டியில் தனக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் பௌலிங், பேட்டிங் என்று இரண்டிலும் அசத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையே தற்போது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. இன்று மொகாலியில் இரு அணிகளுக்கிடையே இரண்டாவது ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது.

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள கேதர் ஜாதவ் காயமடைந்ததால் தமிழகத்தை சேர்ந்த 18 ட்டே வயதான ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் இன்றைய ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தருக்கு விளையாட வாய்ப்பு அளிக்கப்படுமா என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வாஷிங்டன் சுந்தர், எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் இந்திய அணிக்காக விளையாடுவது தான் உச்சபட்ச கனவாக இருக்கும். அதில் நானும் விதிவிலக்கல்ல என தெரிவித்துள்ளார்.

ஆனால் 18 வயதிலேயே இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்திருப்பது பெரிய விஷயம் என்றும் இதற்காக தான் கடினமாக உழைத்துள்ள்ளதாகவும், கூறினார்.

ஒரு சுழற்பந்து வீச்சாளராக தான் 10 ஓவர்கள் வீசுவதற்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம் என்றும் எந்த வரிசையிலும் என்னால் பேட்டிங்கில் பங்களிப்பை தர முடியும் என்றும்வாஷிங்டன் சுந்தர் தெரிவித்தார்.