Wales Cup match at the start of the new synthetic Tuticorin

கோவில்பட்டியில் வேலம்மாள் வேல்ஸ் வித்யாலயா கோப்பைக்கான ஐந்தாவது மாநில அளவிலான ஆடவர் ஜூனியர் வலைகோல் பந்தாட்டப் போட்டித் தொடங்கியது.

தூத்துக்குடி, கோவில்பட்டியில் புதிதாக செயற்கை இழை வலைகோள் (ஹாக்கி) மைதானம் அமைக்கப்பட்டது. இதில், தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் ஐந்து நாள்கள் நடைபெறும் வேலம்மாள் வேல்ஸ் வித்யாலயா கோப்பைக்கான போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட ஹாக்கி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தப் போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கினார். வேலம்மாள் வேல்ஸ் வித்யாலயா கோப்பைக்கான மாநில ஹாக்கிப் போட்டியின் தலைவர் தொழிலதிபர் பரமசிவம், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அர்ஜுனா விருது பெற்றவரான ஒலிம்பியன் முகமது ரியாஸ், தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி அணியும், திருவாரூர் மாவட்ட ஹாக்கி அணியும் மோதும் முதல் ஆட்டத்தைத் தொடங்கி வைத்தார்..

இதில், தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி அணி 10-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று கர்சித்தது.

இரண்டாவது ஆட்டத்தில், திருவண்ணாமலை மாவட்ட ஹாக்கி அணியும், காஞ்சிபுரம் மாவட்ட ஹாக்கி அணியும் மோதியதில் காஞ்சிபுரம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.