Vosniyakki dressed up for grabs in the final round Johanna
மியாமி மாஸ்டர்ஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் கரோலின் வோஸ்னியாக்கி மற்றும் ஜோஹன்னா கோன்டா ஆகியோர் மோதவுள்ளனர்.
போட்டித் தரவரிசையில் 12-ஆவது இடத்தில் இருக்கும் டென்மார்க்கின் வோஸ்னியாக்கி தனது அரையிறுதியில் 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தினார்.
மியாமி மாஸ்டர்ஸ் போட்டியில் முதன்முறையாக இறுதிச் சுற்றிற்கு முன்னேறி உள்ளார் வோஸ்னியாக்கி.
இதுபற்றி அவர் பேசியது, "முதல் செட்டை இழந்த பிறகு நான் எப்படி சரிவிலிருந்து மீண்டேன் என்று எனக்கே தெரியவில்லை. ஏனெனில் முதல் செட்டை இழப்பது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.
இரண்டாவது செட்டின் ஆரம்பத்தில் சிறப்பாக ஆடியதால் நம்பிக்கை பெற்றேன். அதன்பிறகு சிறப்பாக ஆடி வெற்றி பெற்றேன். இது உண்மையிலேயே சிறப்பு மிக்க வெற்றியாகும்' என்றார்.
மற்றொரு அரையிறுதியில் பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டா 6-4, 7-5 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி வெற்றிக் கண்டார்.
இதுகுறித்துப் அவர் பேசியது, "இறுதி ஆட்டத்தில் வோஸ்னியாக்கியை சமாளிப்பது என்பது மிகக் கடினமானது. அவர் நிச்சயம் கடுமையாகப் போராட வைப்பார்' என்று பேசினார்.
