Vishwanathan Anand equal with chess with America
நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் - அமெரிக்காவின் ஹிகாரு நகாமுரா ஆகியோர் மோதிய 2-வது சுற்று ஆட்டம் சமனில் முடிந்தது.
நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தனது முதல் சுற்றில் ஆர்மீனியாவின் லெவோன் ஆரோனியனுடன் சமன் செய்தார்.
இந்த நிலையில், தற்போது 2-வது ஆட்டத்தையும் அவர் சமன் செய்துள்ளார். அதன்படி,
இந்த ஆட்டத்தில் அமெரிக்காவின் ஹிகாரு நகாமுராவுடன் மோதினார் ஆனந்த். நகாமுராவின் சாதுர்யமான நகர்த்துதல்களால் தடுமாற்றமடைந்த ஆனந்த், பின்னர் அதிலிருந்து மீண்டு சிறப்பான வியூகங்களோடு காய்களை நகர்த்தினார்.
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் ஆட, 39 நகர்த்துதல்களுக்குப் பிறகு ஆட்டத்தை சமன் செய்துகொள்ள ஆனந்த் - நகாமுரா ஆகிய இருவருமே ஒப்புக்கொண்டனர். இரண்டாவது சுற்றின் இதர ஆட்டங்களிலும் எவருக்கும் வெற்றி கிடைக்கவில்லை.
ரஷியாவின் செர்கெய் கர்ஜாகின் - நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென், ஆர்மீனியாவின் லிவோன் ஆரோனியன் - அமெரிக்காவின் வெஸ்லி சோ, அமெரிக்காவின் ஃபாபியானோ கருனா - அஜர்பைஜானின் ஷக்ரியார் மாமெதியாரோவ், சீனாவின் டிங் லிரென் - பிரான்ஷின் மேக்ஸிம் வச்சியர் ஆகியோர் மோதிய ஆட்டங்களும் சமனில் முடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
