Vishwanath Anand equalise the 4th round of the international chess tournament ...
சின்கியூபீல்டு கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டியின் 4-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சமன் செய்தார்.
சின்கியூபீல்டு கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியின் 4-வது சுற்றில் ஆர்மீனியாவின் லெவோன் ஆரோனியனுடன் சமன் செய்தார் ஆனந்த்.
ஆனால், நடப்பு உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியரிடம் தோல்வி கண்டார்.
அமெரிக்காவின் பாபியானோ கருணா, ரஷியாவின் செர்ஜி கர்ஜாகினுடனும், ரஷியாவின் பீட்டர் ஸ்விட்லர், அமெரிக்காவின் வெஸ்லே சோவுடனும் சமன் செய்தார்.
மற்றொரு ரஷிய வீரரான இயான் நெபோம்நியாக்ஷி, அமெரிக்காவின் ஹிகாரு நாகமுராவை தோற்கடித்தார்.
இன்னும் ஐந்து சுற்றுகள் மீதமுள்ள நிலையில், பிரான்ஸின் மேக்ûஸம் வச்சியர் மூன்று புள்ளிகளுடன் தனி முன்னிலைப் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் பாபியானோ கருணா 2.5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், ரஷியாவின் கர்ஜாகின், ஆர்மீனியாவின் லெவோன் ஆரோனியன், அமெரிக்காவின் வெஸ்லே சோ ஆகியோர் தலா 2 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
சின்கியூபீல்டு கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டியின் தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் தொடர்ச்சியாக 4-வது சமனைப் பதிவு செய்துள்ளார். எனினும் அவர் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டார் என்பது ஆறுதலான தகவல்.
