விளையாட்டு துறையில் வழங்கப்படும் விருதுகளுக்கான வீரர்களை தேர்வு செய்யும் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் இடம்பெற்றுள்ளார்.

விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்கள் ஆண்டு தோறும் மத்திய விளையாட்டு துறையால் ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2017-ஆம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜுனா விருது பெறும் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதி சி.கே.தாக்கர் தலைமையில் 12 பேர் கொண்ட இந்த குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், தடகள வீராங்கனை பி.டி.உஷா, குத்துச் சண்டை வீரர் முகுந்த் கிலேகர், கபடி வீரர் சுனில் தப்பாஸ், பாரா தடகள வீராங்கனை லதா மாத்வி உள்ளிட்டோரும் குழுவில் உள்ளனர்.  

இந்தக் குழு வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கூடி விருது பெறுபவர்கள் பட்டியலை இறுதி செய்கிறது.