Virat Kohli will return to Form June 1 - Kapil Dev ...
மினி உலகக் கோப்பை போட்டியின்போது விராட் கோலி ஃபார்முக்கு திரும்புவார் என முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் கூறியதன்மூலம் கோலி தற்போது ஃபார்மில் இல்லை என்பது நிரூபனமாகிறது.
மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்குகிறது.
இந்திய அணியின் கேப்டனான கோலி ஃபார்மை இழந்து தவித்து வருகிற நிலையில் கபில்தேவ் கூறியதாவது:
“கோலியின் ஃபார்மை பற்றி கவலைப்பட தேவையில்லை. அவருடைய திறமை மற்றும் ஆற்றலைப் பற்றி நான் நன்றாக அறிவேன். அவர் சரிவிலிருந்து மீண்டு வருவார். அவர் ரன் குவிக்க முடியாமல் போனதற்கு காரணம் எதுவும் இருப்பதாக நினைக்கவில்லை.
கோலி, இந்திய அணிக்கு முக்கியமான வீரர். அவர் ரன் குவிக்க ஆரம்பித்துவிட்டால் ஒட்டு மொத்த அணியும் ஊக்கம் பெற்றுவிடும். எப்போதுமே கேப்டன் ரன் குவிக்க ஆரம்பித்துவிட்டால், வெற்றி கிடைத்துவிடும்.
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா - பாகிஸ்தான் மோதவுள்ள ஆட்டம் குறித்து கபில்தேவ், 'இந்திய அணி வலுவானதாக இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில்தான் இருக்கிறது. அதனால் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறுவது கடினம் என்ற நிலை இருக்கிறது' என்றுக் கூறினார்.
