Asianet News TamilAsianet News Tamil

virat kohli duck: கோலிக்கு ஓய்வு தேவை; மனஉளைச்சலோடு வெளியேறக்கூடாது: ரவி சாஸ்திரி அட்வைஸ்

virat kohli duck : விராட் கோலிக்கு போதுமான ஓய்வு கொடுங்கள். இன்னும் 6 முதல் 7 ஆண்டுகள்தான் விளையாடப் போகிறார், அவர் மன உளைச்சலோடு அவரின் சேவை முடிந்துவிடக்கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

virat kohli duck : Virat Kohli needs a break, cannot lose his services with a fried brain: Ravi Shastri
Author
Pune, First Published Apr 20, 2022, 11:23 AM IST

விராட் கோலிக்கு போதுமான ஓய்வு கொடுங்கள். இன்னும் 6 முதல் 7 ஆண்டுகள்தான் விளையாடப் போகிறார், அவர் மன உளைச்சலோடு அவரின் சேவை முடிந்துவிடக்கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

2022ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடர் தொடங்கியதிலிருந்து விராட் கோலிக்கு சோதனையாகவே இருக்கிறது. கேப்டன் பதவியிலிருந்து விலகிய கோலி, ஒரு வீரராக பேட்டிங்கில் ஜொலிக்க முயன்றாலும் அதுவும் முடியவில்லை. இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய கோலி,  119 ரன்கள் மட்டும்தான் எடுத்துள்ளார் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதிகபட்சமே 48 ரன்கள்தான். 

virat kohli duck : Virat Kohli needs a break, cannot lose his services with a fried brain: Ravi Shastri

இந்த ரன்களைக் கழித்துப் பார்த்தால், கோலி 6 போட்டிகளில் 71 ரன்கள் மட்டும்தான் எடுத்துள்ளார். அதாவது 6 போட்டிகளில் கோலியின் சராசரி வெறும் 10 ரன்கள்தான் என்பது குறிபப்பிடத்தக்கது.

கோலியின் பலவீனத்தை அனைத்துப் பந்துவீ்ச்சாளர்களும் புரிந்து கொண்டு எளிதாக விக்கெட்டை வீழ்த்தி விடுகிறார்கள். ஆஃப்சைடுக்கு விலக்கி வீசும்போது அந்த வலையில் கோலி வீழ்ந்து விக்கெட்டை இழந்துவிடுகிறார். கடந்த மாதம் 31ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயிட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோலி ஆப்சைடுக்கு வெளியே சென்ற பந்தைத் தொட்டு கோல்டன் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். 

விராட் கோலி மிகுந்த மனஅழுத்தத்திலும், சோர்விலும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அவரால் பேட்டிங்கிலும், பீல்டிங்கிலும் கூட கவனம் செலுத்த முடியவில்லை, கோலியின் வழக்கமான உற்சாகம் களத்தில் காணப்படவில்லை.

இதைக் குறிப்பிட்டு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது: 

நான் பயிற்சியாளராக இருந்த நேரத்தில் நான் முதலில் விராட் கோலியிடம் கூறியது என்னவென்றால், சகவீரர்கள் மீது கருணை காட்ட வேண்டும். நீங்கள் வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட்டால், அந்த வீரர் தனது சிறப்பாகச் செயல்படும் தன்மையை இழந்துவிடுவார். ஆதலால், கவனத்துடன் செயல்படுங்கள் என்றேன்.

virat kohli duck : Virat Kohli needs a break, cannot lose his services with a fried brain: Ravi Shastri

ஆதலால், கோலிக்கு குறைந்தபட்சம் 2 முதல் கூடுதலாகசில மாதங்கள் ஓய்வுதேவை. இங்கிலாந்து பயணத்துக்கு முன்போ அல்லது அதன்பின்போ கோலிக்கு ஓய்வு அவசியம். அவருக்கு ஓய்வுதேவை, இன்னும்6 முதல் 7 ஆண்டுகள்வரை கோலி விளையாடலாம். மனஉளைச்சலோடு இந்த விளையாட்டை விட்டு செல்லக்கூடாது அவரின் பிரச்சினைகளைக் களைந்து அவரை கொண்டு செல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்

கடந்த 6 மாதத்தில் கோலி இந்திய அணியின் ஒருநாள் அணிக்கான கேப்டன், டி20 கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார், டெஸ்ட் அணியிலிருந்தும் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டார். ஆர்சிபி அணிக்காக ஒரு கோப்பையைக் கூட வென்று கொடுக்க முடியாதநிலையில் கோலியே கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.

virat kohli duck : Virat Kohli needs a break, cannot lose his services with a fried brain: Ravi Shastri

ரவி சாஸ்திரியின் கருத்துக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸனும் ஆதரவுதெரிவித்துள்ளார். பீட்டர்ஸன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ விராட் கோலி ஓய்விலிருந்து திரும்பிவருவதை இந்திய அணி உறுதி செய்ய வேண்டும். 100 சதவீதம் சரியாகச் சொன்னீர்கள் ரவி. 
விராட் கோலி திருமணம் முடித்ததில் இருந்து, ஏராளமான விஷயங்களைச் சந்தித்துவருகிறார், தற்போது குழந்தையும் பிறந்துள்ளது, தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் தேவை. கோலி மிகப்பெரிய நட்சத்திரம். கோலிக்கு 6 மாதங்கள் ஓய்வுதேவை, சமூக ஊடகங்களுக்கு ஓய்வு கொடுங்கள்,

வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து மனதை உற்சாகமாக்குங்கள், மீண்டும் அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் முழுமையாக வரும். அடுத்த 12 அல்லது 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு உங்களுக்கான இடத்தை உறுதி செய்யுங்கள். உங்களால் எதையும்செய்ய முடியும் என்பது எங்களுக்குத் தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்

Follow Us:
Download App:
  • android
  • ios