Virat Kohli brand value is more than Lionel Messi Roger Federer tops list with LeBron James behind
மரடோனாவுக்கு பிறகு சரவதேச கால்பந்து ரசிகர்களின் கண்கண்ட கடவுள் மெஸ்சிதான். இவர் களத்தில் நின்றால் கேலரியிலுள்ளவர்களுக்கு பேய் பிடித்துவிடும். அப்பேர்ப்பட்ட ஆட்டக்காரரை ஜஸ்ட் லைக் தட் ஆக ரன் அவுட் ஆக்கியிருக்கிறார் நம்ம விராட் கோஹ்லி!
ஆனால் அது கிரிக்கெட்டில் இல்லை! பின்னே?...
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘போர்ப்ஸ்’ பத்திரிக்கை உலக அளவில் மதிப்பு மிக்க விளையாட்டு நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நம்ம கோஹ்லி 7வது இடம் பிடித்துள்ளார்.
சர்வதேச தரவரிசை பட்டியலில் நமது இந்திய அணி ஹை பாயிண்டில் உள்ள நிலையில் அதன் ஸ்கிப்பர் எனும் நிலையிலும், ட்வென்டி-20 போட்டியில் நம்பர் 1 பேட்ஸ்மேன் எனும் அளவிலும் கோஹ்லியின் சந்தை மதிப்பு 92 கோடியாக உள்ளது.
கோஹ்லிக்கு கிடைத்திருக்கும் அந்தஸ்தானது அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்சியை விட அதிகம். இந்த பட்டியலில் மெஸ்சிக்கு கிடைத்திருக்கும் இடம் 9-வதுதான். ஆனால் விராட் அவரை ரன் அவுட் ஆக்கிவிட்டு தான் முந்தியிருக்கிறார்.
இது மட்டுமில்லை போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஒரே கிரிக்கெட் வீரர் எனும் பெருமையும் அனுஷ்கா சர்மாவின் ஆருயிர் பாய் ஃப்ரெண்டான விராட் கோஹ்லியையே சாரும்!
அனுஷ்கா மேடம் ஸ்வீட் எடுங்க, கொண்டாடுங்க!
