வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமான இளம் வீரர் பிரித்வி ஷா, அறிமுக போட்டியிலேயே சதமடித்து மிரட்டினார். அந்த தொடரில் சிறப்பாக ஆடியதை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பிரித்வி ஷா இடம்பிடித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரை ஆடி முடித்துவிட்டது. இதையடுத்து  4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் பிரித்வி ஷா இடம்பிடித்துள்ளார். 

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலமாக பார்க்கப்படுகிறார் பிரித்வி ஷா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் இவர் தொடக்க வீரராக களமிறக்கப்படுவார் என்பது உறுதி. இவருடன் மற்றொரு வீரராக யார் களமிறக்கப்படுவது யார் என்பதுதான் கேள்வியாக உள்ளது. ஆனால் பிரித்விக்கான இடம் உறுதி செய்யப்பட்ட ஒன்று. 

டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக ஆஸ்திரேலியா லெவன் அணியுடன் இந்திய அணி பயிற்சி போட்டியில் ஆடிவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ராகுலை தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களுமே சிறப்பாக ஆடினர். பிரித்வி ஷா, புஜாரா, கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி ஆகியோர் அரைசதம் அடித்தனர். ரோஹித் சர்மா 40 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ரிஷப் பண்ட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 11 ரன்களை எடுத்தார். இந்த இன்னிங்ஸில் ராகுலைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவருமே சிறப்பாக ஆடினர். 

குறிப்பாக வழக்கம்போலவே ஆஸ்திரேலியாவிலும் அபாரமாக ஆடி பிரித்வி ஷா நம்பிக்கையளித்தார். 69 பந்துகளை எதிர்கொண்ட பிரித்வி ஷா, 11 பவுண்டரிகளுடன் 66 ரன்களை குவித்தார். ஒவ்வொரு ஷாட்டையும் அபாரமாக ஆடினார். ஒவ்வொரு பவுண்டரியுமே ரசிக்கும்படியான ஷாட்டுகள். பிரித்வி ஷா இன்னிங்ஸின் வீடியோ இதோ..