இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் - தவான் அமைத்து கொடுத்த வலுவான அடித்தளத்தால் 50 ஓவர் முடிவில் 324 ரன்களை குவித்தது. 

325 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 166 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பிறகு பிரேஸ்வெல் தனி ஒருவனாக நின்று இந்திய அணியின் பவுலிங்கை அடித்து ஆடி அரைசதம் கடந்தார். எனினும் அவரும் 57 ரன்களில் ஆட்டமிழக்க, 40.2 ஓவரில் 234 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் ரோஸ் டெய்லரை செய்த ஸ்டம்பிங்கின் மூலம் மீண்டுமொருமுறை தனது விக்கெட் கீப்பிங் திறமையை இந்த உலகிற்கு காட்டியுள்ளார் தோனி. கேதர் ஜாதவ் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தை ஆடிய டெய்லர், ஃபிரண்ட்ஃபூட் ஆடியபோது, பேலன்ஸ் கிடைக்காமல் லேசாக காலை தூக்கினார். ஆனால் பேலன்ஸுக்காக தூக்கியதால் உடனடியாக கீழே வைத்துவிட்டார். ஆனால் காலைத்தூக்கி மீண்டும் ஊன்றுவதற்கு இடையேயான மிகக்குறைந்த இடைவெளியில் மிகவும் நுணுக்கமாகவும் துல்லியமாகவும் ஸ்டம்பிங் செய்தார் தோனி. 

இந்த ஸ்டம்பிங்கை மூன்றாவது அம்பயரை ஆய்வு செய்ய கள அம்பயர் பரிந்துரைத்ததை அடுத்து மூன்றாவது அம்பயர் அதை ஆய்வு செய்தார். மிகவும் நுணுக்கமான அந்த ஸ்டம்பிங் மூன்றாவது அம்பயரை உடனடியாக முடிவெடுக்க முடியாமல் செய்தது. நன்றாக ஸூம் செய்து பார்த்து நீண்ட நேர ஆய்விற்கு பிறகு அதை அவுட் என அறிவித்தார் மூன்றாவது அம்பயர். அந்த ஸ்டம்பிங் வீடியோ இதோ..