ஐபிஎல் 11வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை சென்னை அணி வென்றுள்ளது. வாட்சனின் அதிரடி சதத்தால், ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.

இறுதி போட்டியில் சதமடித்து, சென்னை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ஷேன் வாட்சனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. மேலும், இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய பல வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அந்த விருதுகளை பற்றி பார்ப்போம்.

பல்வேறு விருதுகளை பெற்ற வீரர்கள்:

சீசனின் மதிப்புமிக்க வீரர் - சுனில் நரைன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

அதிக ரன்கள் குவித்ததற்கான ஆரஞ்சு தொப்பி - கேன் வில்லியம்சன் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதற்கான பர்ப்பிள் தொப்பி - ஆண்ட்ரூ டை (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)

சீசனின் ஸ்டைலிஷ் வீரர் மற்றும் சிறந்த வளரும் வீரர் - ரிஷப் பண்ட் ( டெல்லி டேர்டெவில்ஸ்)

சூப்பர் ஸ்டிரைக்கர் - சுனில் நரைன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

சீசனின் சிறந்த கேட்ச் - டிரெண்ட் போல்ட் ( டெல்லி டேர்டெவில்ஸ்)

7 போட்டிகளுக்கு குறைவான போட்டிகள் நடந்த மைதானத்தில் சிறந்த மைதானம் - மொஹாலி மைதானம்

ஐபிஎல் 11வது சீசனின் சிறந்த மைதானம் - கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம்