usen bolt get 3rd place in 100 meter running race
உலக தடகள போட்டியின் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட், அமெரிக்க வீரர் ஜஸ்டின் கட்லினிடம் தங்கப்தக்கத்தை கோட்டைவிட்டு மன்றாம் இடத்தை மட்டுமே பிடித்தார்.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் 16-வது உலக தடகள போட்டிகள் தற்போத நடைபெற்றுவருகின்றன. 205 நாடுகள் பங்கேற்கும் இதில் 24 போட்டிகள் இடம் பெற்றுள்ளன.
பிரபல ஓட்டப்பந்தய வீரரான ஜமைக்காவைச் சேர்ந்த உசேன் போல்ட் இந்த தொடருடன் ஓய்வு பெறப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான உசேன் போல்ட், ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். உலக தடகளத்தில் 11 தங்கப் பதக்கங்களை அள்ளியிருக்கும் இவர், தோற்கடிக்கப்படாமல் விடை பெறுவேன் என போட்டிக்கு முன்னதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், மிக முக்கிய போட்டியான 100மீ ஓட்டப்பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில், அமெரிக்க வீரர் கட்லின் 100 மீட்டர் தூரத்தை 9.92 விநாடிகளிலும், அவரது சக வீரரான கிறிஸ்டியன் கோல்மேன் 9.94 விநாடிகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற போல்ட் 9.95 விநாடிகளில் மூன்றாம் இடத்திற்கு வந்து அதிர்ச்சியளித்தார்.
இறுதிப்போட்டியில் வெண்கலப்பதக்கம் மட்டுமே பெற்றிருந்தாலும், ரசிகர்கள் உசேன் போல்ட்டுக்கு சிறப்பான மரியாதையுடன் பிரியாவிடை அளித்தனர்.
