under 19 world cup india win zimbabwe by ten wickets

19 வயதுக்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையில், ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி “பி” பிரிவில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. பப்புவா நியூ குய்னா அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அசத்தியது.

இதையடுத்து ஜிம்பாப்வே அணியையும் 10 விக்கெட் வித்தியாத்தில் இந்திய அணி வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 154 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், ஷப்னம் கில், ஹார்விக் தேசாயின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 21.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. 

ஹார்விக் தேசாய், 73 பந்துகளில் 56 ரன்களும் ஷப்னம் கில், 59 பந்துகளில் 90 ரன்களும் அடித்தனர். இந்திய அணியின் பெருஞ்சுவர் ராகுல் டிராவிட், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சி அளித்து வருகிறார். 

பி பிரிவில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, காலிறுதியில் வங்கதேசத்துடன் ஆடுவதற்கான வாய்ப்பு உள்ளது.