இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 

நேப்பியரில் நடந்த முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, மவுண்ட் மாங்கனியில் நடந்த இரண்டாவது போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலுமே நியூசிலாந்து அணியின் மீது இந்திய அணி முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தி ஆடியது. 

மவுண்ட் மாங்கனியில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் கள நடுவர் நைஜல் லாங்கின் குறும்பான நடவடிக்கைகள் ரசிகர்களை கவர்ந்தது. அவரது செயல்பாடுகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

நியூசிலாந்து அணியின் இன்னிங்ஸில் அந்த அணி விக்கெட்டுக்கு பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது, 41வது ஓவரை சாஹல் வீசினார். அப்போது கையை சுழற்றிவிட்டு காயமடைந்ததை போல் முகபாவனைகளை காட்டி நடித்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

மேலும் நியூசிலாந்து அணியின் பேட்டிங்கில் புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை மிட் ஆஃப் திசையில் அடித்துவிட்டு கப்டில் ரன் ஓடினார். அந்த பந்தை பிடித்து ராயுடு ஸ்டம்பில் அடிக்க முயன்றார். ஆனால் அது மிஸ் ஆகிவிட்டது. ராயுடு பந்தை எறியும்போது அதை பார்த்து ஆடிக்கொண்டிருந்தார். அந்த வீடியோவும் வைரலாகிவருகிறது.