Asianet News TamilAsianet News Tamil

எனக்குலாம் அப்படி நடக்கலையே!! முரளி விஜய் காலை வாரிவிட்ட உமேஷ் யாதவ்

வீரர்களை அணியிலிருந்து நீக்கும்போது அதற்கு சரியான காரணத்தை தேர்வுக்குழு தெரிவிக்க தவறுவதாக சர்ச்சை கிளம்பிய நிலையில், அதுபோன்ற அனுபவம் தனக்கு நேர்ந்ததில்லை என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
 
umesh yadav denied allegation raised by murali vijay on selection committee
Author
India, First Published Oct 6, 2018, 4:45 PM IST

வீரர்களை அணியிலிருந்து நீக்கும்போது அதற்கு சரியான காரணத்தை தேர்வுக்குழு தெரிவிக்க தவறுவதாக சர்ச்சை கிளம்பிய நிலையில், அதுபோன்ற அனுபவம் தனக்கு நேர்ந்ததில்லை என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கருண் நாயருக்கு ஒரு போட்டியில் கூட அணியில் ஆட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதுவே பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அந்த தொடரில் ஆடுவதற்கே வாய்ப்பு வழங்கப்படாத கருண் நாயர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புறக்கணிக்கப்பட்டார். 

umesh yadav denied allegation raised by murali vijay on selection committee

வாய்ப்பே கொடுக்காமல் கருண் நாயர் அணியிலிருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஹர்பஜன் சிங், வீரர்கள் தேர்வு எதனடிப்படையில் நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று பகிரங்கமாக தேர்வுக்குழுவுக்கு எதிராக கருத்து தெரிவித்தார். கருண் நாயரும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இதுதொடர்பாக கருண் நாயரிடம் தேர்வுக்குழு சார்பில் விளக்கமளிக்கபட்டதாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்தும் தெரிவித்திருந்தார். 

umesh yadav denied allegation raised by murali vijay on selection committee

இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் சரியாக ஆடாததால் அந்த தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து நீக்கப்பட்ட முரளி விஜயும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெறவில்லை. அதனால் அதிருப்தியில் இருந்த முரளி விஜய், இங்கிலாந்து தொடரில் அணியிலிருந்து நீக்கப்பட்தற்கு பிறகு தன்னை தேர்வுக்குழுவினர் தொடர்புகொள்ளவே இல்லை எனவும் அணி தேர்வு குறித்து ஹர்பஜன் சிங் தெரிவித்த கருத்துடன் உடன்படுவதாகவும் முரளி விஜய் பகிரங்கமாக தெரிவித்தார். 

umesh yadav denied allegation raised by murali vijay on selection committee

முரளி விஜயின் குற்றச்சாட்டுக்கு தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்ததோடு, அதை மறுக்கவும் செய்தார். மேலும் முரளி விஜயை தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியதாகவும், முரளி விஜயின் குற்றச்சாட்டு ஆச்சரியமளிப்பதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உமேஷ் யாதவ், தனக்கு இதுபோன்ற அனுபவம் தேர்வுக்குழுவிடம் நேர்ந்ததில்லை எனவும் தான் அணியிலிருந்து நீக்கப்பட்ட சமயங்களில், அதற்கான காரணத்தை தன்னிடம் தேர்வுக்குழு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். 

umesh yadav denied allegation raised by murali vijay on selection committee

முரளி விஜய் தேர்வுக்குழு மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், அதை சக வீரரான உமேஷ் யாதவே மறுத்திருப்பது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 
Follow Us:
Download App:
  • android
  • ios