தலைவன் இருக்கிறான் படம் அரசியல் கலந்த கதை என்பதால் உதயநிதி ஸ்டாலின் அந்தப் படத்தை தயாரிக்க மறுத்துவிட்டார் என்று சமீபத்திய நேர்காணல் ஒன்றில் உதயநிதி தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை எடுப்பவர். இவர் சில வருடங்களுக்கு முன் “தலைவன் இருக்கிறான்” என்ற படத்தை இயக்குவதாக இருந்தார்.

இதில் இந்தியாவின் முன்னணி நடிகர்கள் மற்றும் டெக்னிஷியன்கள் ஒப்பந்தமாகி இருந்தனர். அப்போது இப்படத்தைத் தயாரிக்க உதயநிதியிடம், கமல் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், உதயநிதி, “சார் இது அரசியல் கலந்த கதை, அதனால், நான் தயாரித்தால் சரியாக இருக்காது, மேலும், எனக்குப் பஞ்ச தந்திரம் மாதிரி ஒரு காமெடி படம் உங்களிடமிருந்து வேண்டும்’ என்று கூறி அப்படத்தை தயாரிக்க மறுத்துவிட்டாராம்.

இந்த விபரத்தை உதயநிதி ஸ்டாலின் தனது நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

இப்போது தலைவன் இருக்கிறான் படத்தை கமலே தயாரித்து, இயக்கி நடிக்க இருக்கிறார் என்பது கொசுறு தகவல்.