இலங்கை அணிக்கு, இடதுகை பேட்ஸ்மேன் உபுல் தரங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இலங்கை அணிக்கு, இடதுகை பேட்ஸ்மேன் உபுல் தரங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த அணிக்கான துணைக் கேப்டனாக குஷல் ஜனித் பெரரா அறிவிக்கப்பட்டுள்ளார்.
வரும் 14-ஆம் தேதி ஹராரேவில் தொடங்கும் இந்தத் தொடரின் முதல் ஒருநாள் ஆட்டத்தில், ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது இலங்கை அணி.
இலங்கை அணி விவரம்:
உபுல் தரங்கா, தனஞ்ஜெய டி சில்வா, குசல் ஜனித் பெரரா, நிரோஷன் திக்வெல்லா, குசல் மெண்டிஸ், ஷேஹன் ஜெயசூரியா, அùஸலா குணரத்னே, சச்சித் பதிரனா, நுவன் குலசேகரா, தாசன் சனகா, நுவன் பிரதீப், லாஹிரு குமாரா, சுரங்கா லக்மல், லக்ஷண் சண்டகன், ஜெஃப்ரி வேன்டர்சே.
