Ubul taranka has been banned for two ODI matches
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் நான்கு ஓவர்கள் மெதுவாக பந்து விசியதால் இலங்கை பொறுப்பு கேப்டன் உபுல் தரங்காவுக்கு இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட தடையும், மற்ற வீரர்களுக்கு 60 சதவீதம் போட்டி கட்டணத்தில் இருந்து அபராதமும் விதிக்கப்பட்டது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் சனிக்கிழமை இலண்டனில் ‘பி’ பிரிவு லீக் நடந்தது. இதில், தென்ஆப்பிரிக்க அணி 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது.
இந்த ஆட்டத்தில் இலங்கை அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காததால், ஆட்டத்தின் இடையே, மெதுவாக பந்து வீசுவது குறித்து நடுவர்கள் இலங்கை பொறுப்பு கேப்டன் உபுல் தரங்காவை அடிக்கடி எச்சரித்தும் வந்தனர். இருந்தும் நான்கு ஓவர்கள் மெதுவாக பந்து வீசியது ஆட்டத்தின் முடிவில் தெரிய வந்தது.
இதுகுறித்து விசாரித்த ஐ.சி.சி. போட்டி நடுவர், இலங்கை பொறுப்பு கேப்டன் உபுல் தரங்காவுக்கு இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதித்தார். இதனால் இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவரால் விளையாட முடியாது.
அணியின் மற்ற வீரர்களுக்கு தலா 60 சதவீதம் போட்டி கட்டணத்தில் இருந்து அபராதமாக விதிக்கப்பட்டது.
அடுத்த ஆட்டத்திற்கு மேத்யூஸ் உடல் தகுதியை எட்டாவிட்டால், சன்டிமால் இலங்கை அணியை வழி நடத்துவார்.
