U-19 World Cup India - Zimbabwe teams collide today
பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
காலிறுதி வாய்ப்பை ஏற்கெனவே உறுதி செய்துவிட்ட இந்திய அணி, ஜிம்பாப்வே மீதும் ஆதிக்கம் செலுத்தி தனது தோல்வியில்லா வெற்றி நடையை தொடரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் ஒரேயொரு மாற்றமாக காயமடைந்துள்ள பந்துவீச்சாளர் இஷான் பொரெலுக்கு பதிலாக ஆதித்யா தாக்கரே இணைந்துள்ளார்.
அனுகுல் ராய் தலைமையிலான இந்திய பந்துவீச்சு படை விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தும் என்பதில் ஐயம் இல்லை.
அதேபோல, கேப்டன் பிருத்வி ஷா தலைமையிலான பேட்டிங் ஆர்டரும் எதிரணி பந்துவீச்சை சிதறடிக்க வாய்ப்புகள் உள்ளன.
இதனிடையே, நேற்று நடைபெற்ற 'சி' பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்து ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
அதே பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் கனடா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நமீபியாவை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
