U-17 World Cup France and England are the most advanced teams for the next round

பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ், ஹோண்டுராஸ், இங்கிலாந்து, இராக் அணிகள் அடுத்த முன்னேறி அசத்தியுள்ளன.

பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டி அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியைத் தோற்கடித்தது. 

இதில் பிரான்ஸ் வீரர் அமைன் கோய்ரி 13 மற்றும் 71-வது நிமிடங்களில் கோலடித்தார். ஜப்பான் அணிக்கு 73-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதில் டைசே மியாஷிரோ கோலடித்தார். இறுதியில், பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

தொடர்ச்சியாக 2-வது வெற்றியைப் பெற்ற பிரான்ஸ், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

குவாஹாட்டியில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஹோண்டுராஸ் அணி 5-0 என்ற கோல் கணக்கில் நியூ கேல்டோனியாவை தோற்கடித்தது. இதன்மூலம் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. 

கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவை வீழ்த்தியது. இது அந்த அணியும் 2-வது வெற்றியை பெற்றதன்மூலம் அடுத்தச் சுற்றை உறுதி செய்தது இங்கிலாந்து. 

கொல்கத்தாவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இராக் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சிலியைத் தோற்கடித்தது.