நீங்க டி20-யில் வேணா கெத்தா இருக்கலாம்.. பாகிஸ்தானை பந்தாடிய நியூசிலாந்து!! 3 சூப்பர் வீரர்களை வீழ்த்தி ஹாட்ரிக் போட்ட போல்ட்

https://static.asianetnews.com/images/authors/a3d865ff-350d-54f1-ae0b-e6327862a3a9.jpg
First Published 8, Nov 2018, 1:58 PM IST
trent boult hat trick wickets and new zealand defeats pakistan in first odi match
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 
 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான டி20 தொடரை 3-0 என வென்று பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து நியூசிலாந்து அணி வென்றது. இதையடுத்து ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஜார்ஜ் ஒர்க்கர் 1 ரன்னில் வெளியேறினார். கோலின் முன்ரோ 29 ரன்களிலும் கேப்டன் வில்லியம்சன் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய ரோஸ் டெய்லர் 80 ரன்கள் குவித்து சதமடிக்கும் வாய்ப்பை இழந்து ஆட்டமிழந்தார். டாம் லாதம் 68 ரன்களை குவித்தார். இதையடுத்து நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 266 ரன்களை எடுத்தது.

267 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு மூன்றாவது ஓவரிலேயே அதிர்ச்சியளித்தார் டிரெண்ட் போல்ட். ஃபகார் ஜமான், பாபர் அசாம் மற்றும் முகமது ஹஃபீஸ் ஆகிய மூவரையும் அடுத்தடுத்து வீழ்த்தி மிரட்டினார் போல்ட். இந்த ஹாட்ரிக் விக்கெட் தான் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு காரணம். பாகிஸ்தான் அணியின் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்த உதவினார் போல்ட். 

சர்ஃப்ராஸ் அகமதுவும் இமாத் வாசிமும் அரைசதம் அடித்தனர். எனினும் அந்த அணி 47.2 ஓவருக்கே 219 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

loader