Total 20 medals for Commonwealth Games There are six gold ......
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு ஆறு தங்கங்கள் உள்பட 20 பதக்கங்கள் பெற்று நிறைவு செய்துள்ளது.
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியின் கடைசி நாளான நேற்று ஆடவருக்கான 50 மீட்டர் ரைஃபிள் மூன்று பொசிஷன்ஸ் பிரிவில் இந்தியாவின் சத்யேந்திர சிங் தங்கமும், சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளியும் வெற்றிப் பெற்றனர்.
முன்னதாக நடைபெற்ற இறுதிச்சுற்றுக்கு சத்யேந்திர சிங் மற்றும் சஞ்சீவுடன் செயின் சிங்கும் தகுதிபெற்றிருந்தார். தொடக்க நிலையில் செயின் சிங் 3-வது இடத்தில் இருக்க, மூன்று பதக்கங்களையும் இந்தியா கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அவர் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.
சத்யேந்திர சிங் 454.2 புள்ளிகளுடன் முதலிடத்தையும், சஞ்சீவ் ராஜ்புத் 453.3 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் டேன் சாம்சன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
ஆடவருக்கான 'டிராப்' பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர் பீரேந்தீப் சோதி, அதில் 4-வது இடம் பிடித்தார்.
இந்த காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியை இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்க: என மொத்தம் 20 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
