Tory Boeve of America won gold medal in World Athletic Championship
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 100 மீ. ஓட்டத்தில் அமெரிக்காவின் டோரி போவீ தங்கப் பதக்கம் வென்றார்.
பதினாறாவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இலண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 100 மீ. ஓட்டத்தில் அமெரிக்காவின் டோரி போவீ 10.85 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கத்தை வென்றார். இதுதான் இந்த சீசனின் சிறந்த ஓட்டம் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
இதே பிரிவில் ஐவரி கோஸ்டின் மேரி ஜோஸீ 10.86 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
நெதர்லாந்தின் டேப்னே ஸ்கிப்பெர்ஸ் 10.96 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.
அதேநேரத்தில் கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜமைக்காவின் எலைன் தாம்சன் இந்த முறை பதக்க வாய்ப்பை இழந்தார். அவர் 10.98 விநாடிகளில் இலக்கை எட்டிய 5-வது இடத்தைப் பிடித்தார்.
இந்தப் போட்டியில் முதல் 50 மீ. தூரம் வரை தாம்சனே முதலிடத்தில் இருந்தார். ஆனால் அதன்பிறகு பின்னுக்குத் தள்ளப்பட்ட அவரால் கடைசி வரை அதிலிருந்து மீள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
