Auction for players to play in Pro Kabaddi today

புரோ கபடி லீக் போட்டியில் விளையாடவுள்ள வீரர்களுக்கான ஏலம் இன்று மும்பையில் தொடங்குகிறது. மொத்தம் 422 வீரர்கள் இந்த ஏலத்தில் கலந்து கொள்கின்றனர்.

புரோ கபடி லீக் போட்டிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இதன், 5 சீசன் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்த நிலையில் 6-வது சீசன் போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் தொடங்குகின்றன. இதனொரு பகுதியாக 12 அணிகள் சார்பில் வீரர்களை வாங்குவதற்கான ஏலம் மும்பையில் புதன், வியாழக்கிழமைகளில் நடக்கிறது. 

மொத்தம் 422 வீரர்கள் பட்டியலில் உள்ளனர். இதில் 87 வீரர்கள் (எதிர்கால கபடி வீரர்கள்) என்ற திட்டத்தின் கீழும், 58 வீரர்கள் வெளிநாடுகளில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

ஈரான், வங்கதேசம், ஜப்பான், கென்யா, கொரியா, மலேசியா, இலங்கை போன்ற 14 நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர். 12 அணிகளில் ஏற்கெனவே 9 அணிகள் 21 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 

இதர மூன்று அணிகளான யுபி யோதா, யு மும்பா, ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் போன்றவை தங்கள் அணியை மீண்டும் கட்டமைக்க வேண்டியுள்ளது.