To prevent from match fixing players ban for using smart watches
கிரிக்கெட் சூதாட்டை தடுக்க வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஸ்மார்ட் கடிகாரங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உத்தரவிட்டுள்ளது.
ஐசிசி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், "கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பகுதிக்கான ஒழுங்குமுறை விதிகள் கீழ் தகவல் தொடர்புக்கு உதவும் ஸ்மார்ட் கடிகாரங்களை அணிய தடை விதிக்கப்படுகிறது.
மைதானத்திலோ அல்லது தங்கும் அறைகளிலோ ஸ்மார்ட் கடிகாரங்களை அணியக் கூடாது. இணையதளம் வசதியுடன் கூடிய எந்த சாதனத்தையும் வீரர்கள் வைத்திருத்தல் கூடாது.
இங்கிலாந்தில் லார்ட்ஸ் மைதானத்தில் பாகிஸ்தான் அணி பங்கேற்றுள்ள டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
இந்த நிலையில் அப்போட்டியில் ஸ்மார்ட் கடிகாரங்களை வீரர்கள் அணியக் கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேட்ச் பிக்சிங் சம்பவங்களை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தங்கள் பணியை மேற்கொள்ள சில சாதனங்களை வைத்துக் கொள்ள அனுமதி தரப்படும்" என்று அதில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
