TNPL update thoothukudi got 5th victory
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 15-வது ஆட்டத்தில் ஆறு விக்கெட்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணியை துவம்சம் செய்து ஐந்தாவது வெற்றியைப் பிடித்தது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி.
தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியின் திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், கோவை கிங்ஸ் அணியும் மோதின.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் கோவை அணி பேட் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.
பின்னர் தூத்துக்குடி அணி களமிறங்கியது. அந்த அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.
தூத்துக்குடி அணி இதுவரை விளையாடிய ஐந்து ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
