- Home
- Sports
- Sports Cricket
- பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி பந்து வீச தடை.. பாதியில் பந்தை புடுங்கிய நடுவர்.. என்ன நடந்தது?
பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி பந்து வீச தடை.. பாதியில் பந்தை புடுங்கிய நடுவர்.. என்ன நடந்தது?
பிக் பாஷ் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக அறிமுகமான அவர் மெல்போர்ன் ரெனகேட்ஸுக்கு எதிரான தனது முதல் அறிமுக போட்டியிலேயே பெரும் அவமானத்தை சந்தித்துளார் ஷாஹீன் அப்ரிடி.

ஷாஹீன் அப்ரிடி பந்து வீச தடை
ஆஸ்திரேலிய டி20 லீக்கான பிக் பாஷ் லீக்கில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக அறிமுகமான பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடியை போட்டி நடுவர் பாதியிலேயே பந்து வீச தடை விதித்தார். ஷாஹீன் அப்ரிடி இந்த போட்டியின் 18வது ஓவரில் தனது 3வது ஓவரை வீச வந்தார்.
இரண்டு ஹை ஃபுல் டாஸ் நோ பால்கள் உட்பட தொடர்ச்சியாக மூன்று நோ பால்களை அவர் வீசினார். இதில் இரண்டு நோ பால்களும் நேராக பேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்க்கும் வகையில் சென்றது.
பந்தை பாதியில் புடுங்கிய நடுவர்
18வது ஓவரில் அவர் 4 பந்துகள் வீசிய நிலையில், அதன்பிறகு அவர் தொடர்ந்து பந்துவீச நடுவர் மறுத்து விட்டார். அவரிடம் இருந்து பந்தை வாங்கிய நடுவர் பிரிஸ்பேன் ஹீட் அணி கேப்டனிடம் கொடுத்தார். அதன்பிறகு மீதி 2 பந்துகளையும் வெறோரு பவுலர் வீசினார். ஆஸ்திரேலிய டி20 லீக்கான பிக் பாஷ் லீக்கில் ஷாஹீன் அப்ரிடி விளையாடுவது இதுவே முதன்முறை.
பிக் பாஷ் லீக்கின் அறிமுக போட்டியிலேயே மோசம்
இந்த தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக அறிமுகமான அவர் மெல்போர்ன் ரெனகேட்ஸுக்கு எதிரான தனது முதல் அறிமுக போட்டியிலேயே பெரும் அவமானத்தை சந்தித்துளார். மேலும் மிக மோசமாக பந்து வீசிய ஷாஹீன் அப்ரிடி 2.4 ஓவர்களில் எந்த ஒரு விக்கெட்டும் எடுக்காமல் 43 ரன்களை வாரி வழங்கினார்.
தான் வீசிய 16 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களை விட்டுக் கொடுத்தார். 2.4 ஓவர் ஸ்பெல்லில் அப்ரிடி மூன்று நோ பால்களையும் இரண்டு வைடுகளையும் வீசினார். இதேபோல் பேட்டிங்கிலும் சொதப்பிய அப்ரிடி 3 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார்.
நடுவர் பந்துவீச தடை விதித்தது ஏன்?
கிரிக்கெட் விதி 41.7 படி (MCC Laws of Cricket)ஒரு ஓவரில் அல்லது இன்னிங்ஸில் தொடர்ச்சியாக ஆபத்தான உயரமான ஃபுல் டாஸ்கள் வீசினால், முதல் முறை எச்சரிக்கை வழங்கப்பட்டு, இரண்டாவது முறை பவுலர் உடனடியாக அந்த இன்னிங்ஸில் மேலும் பந்துவீச தடை விதிக்கப்படுவார். ஷாஹீன் ஒரே ஓவரில் 2 ஆபத்தான பந்துகளை வீசியதால் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முகமது ரிஸ்வானும் சொதப்பல்
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ரெனகேட்ஸுக்கு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. அந்த அணி வீரர் நியூசிலாந்தை சேர்ந்த டிம் சீஃபர்ட் 56 பந்தில் 9 பவுண்டரி, 6 சிக்சருடன் 102 ரன்கள் விளாசினார்.
பின்பு ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மெல்போர்ன் ரெனகேட்ஸுக்கு அணிக்காக விளையாடி மற்றொரு பாகிஸ்தான் முகமது ரிஸ்வானும் 4 ரன்னில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

