TNPL update Madurai super giant defeated by tuticorin

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 26-வது ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸை வீழ்த்தியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 26-வது ஆட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 196 ஓட்டங்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக எஸ்.பி.நாதன் 77 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் ஆடிய மதுரை அணி 8.5 ஓவர்களில் 59 ஓட்டங்களுக்கு மொத்தமாகச் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் அருண் கார்த்திக் 23 ஓட்டங்கள் எடுத்தார்.

தூத்துக்குடி தரப்பில் கணேஷ் மூர்த்தி மூன்று விக்கெட்டுகளையும், ஆஷிக் சீனிவாஸ் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

இந்தப் போட்டியில் மதுரை அணியை வீழ்த்தியதன்மூலம் தூத்துக்குடிக்கு கிடைத்த 7-வது வெற்றியாகும்.