டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 19-வது ஆட்டத்தில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் மதுரை சூப்பர்ஜெயன்ட் அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி.

தமிழ்நாடு பிரீமியர் லீக் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் மதுரை சூப்பர்ஜெயன்ட் அணி முதலில் பேட் செய்தது.

இதில், ஷிஜித் சந்திரன் 37 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்களும், அருண் கார்த்திக் 37 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்களும் எடுத்து அசத்தினர்.

இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்கள் எடுத்தது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் கேப்டன் ராஜகோபால் சதீஷ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

சசிதேவ் 22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்கள் எடுத்தார். சற்குணம் 41 ஓட்டங்கள் எடுத்தார்.

மதுரை தரப்பில் கார்த்திகேயன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதுவரை ஐந்து ஆட்டங்களில் விளையாடியுள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இது 4-வது வெற்றியாகும்.