Tiruvallur team won the Womens Football Tournament Champion in

சென்னையை அடுத்த மேலக்கோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் தேசிய அளவில் மகளிருக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் திருவள்ளுவர் பல்கலைக்கழக அணி சாம்பியன் வென்றது.

கடந்த பிப்ரவரி 25 முதல் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தேசிய அளவில் 15 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.

அரை இறுதியில் விளையாட குருஷேத்திரா, அண்ணாமலை, திருவள்ளுவர் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக அணிகள் தகுதி பெற்றன.

பின்னர் நடைபெற்ற இறுதிச் சுற்றில் திருவள்ளுவர் பல்கலைக்கழக அணி 2-0 கோல் கணக்கில் அண்ணாமலை பல்கலைக்கழக அணியைத் தோற்கடித்து வெற்றியை தட்டிச் சென்றது.

பரிசளிப்பு விழாவில் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி தலைவர் கோசி மேத்யூ, துணை வேந்தர் ஏ.எம்.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.