Tiruvallur lion who won gold at the All India National Games
அகில இந்திய தேசிய விளையாட்டுப் போட்டியின் மூத்தோர் பிரிவில் திருவள்ளூரைச் சேர்ந்தவர் தங்கம் உள்ளிட்ட மூன்று பதக்கங்களை வென்று அசத்திள்ளார்.
39-ஆவது அகில இந்திய தேசிய விளையாட்டுப் போட்டி கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள கண்டீர்வா விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்றன.
கடந்த 21-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டிகளில் மூத்தோர் பிரிவில் அதாவது 70 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெ.சாமுவேல் (72) பங்கேற்றார்.
இதில், சாமுவேல் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியார்.
அதுமட்டுமின்றி, நீளம் தாண்டும் போட்டியில் 4.04 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மேலும், டிரிபுள் ஜம்ப் போட்டியில் 8.52 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கமும் வென்று பாராட்டுகளை குவித்துள்ளார்.
